போர்த்துக்கேயர் காலத் தேவாலயங்கள் | யாழ்ப்பாண நகரம் 400 | மயூரநாதன் இரத்தினவேலுப்பிள்ளை
Description
யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆட்சி போர்த்துக்கேயரின் கையில் இருந்த 38 ஆண்டுகாலத்தில் கத்தோலிக்க மதத்துக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதற்கு அரசாங்க ஆதரவும் இருந்தது. அப்போதைய யாழ்ப்பாண நகரில் பல கத்தோலிக்கத் தேவாலயங்கள் இருந்தன. இவற்றுள் ஒன்றைத் தவிர ஏனையவை 1621 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவானவை. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தில் மதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த மூன்று கிறித்தவ சபைகளைச் சேர்ந்தோரும் நகரத்தில் குரு மடங்களையும், தேவாலயங்களையும் நிறுவியிருந்தனர். இவர்களுள் யாழ்ப்பாணம் முழுமையாகப் போர்த்துக்கேயரின் கைக்கு வருமுன்னரே யாழ்ப்பாண இராச்சியத்தில் செயற்பட்டுக்கொண்டு இருந்தோர் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்தோர் ஆவர். இவர்களுடைய முக்கியமான தேவாலயத்துக்கு 1614 ஆம் ஆண்டில் அத்திவாரம் இடப்பட்டது. இதை உள்ளடக்கியே பின்னர் போர்த்துக்கேயரின் கோட்டை கட்டப்பட்டது.